தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஆறாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியினர் தாராபுரம் பகுதியில் முகாமிட்டு வீடு வீடாக சென்று தங்கள் இருக்கும் கட்சிக்கு வாக்குகளை சேகரித்து வருகின்றனர் இந்த நிலையில் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டடம் ஒன்றியம் பகுதியில் சூரிய நல்லூர் கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் அமைச்சர் ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் தொடர்ந்து முன்னாள் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் பேசுகையில்.
பூத் முகவர்கள் கூட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் நாங்கள் உங்களுக்குத் தான் கட்டாயம் ஓட்டு போடுவோம் என மனதார அவர்கள் கூறும் வரை அவர்களை சந்தித்து தொடர்ந்து ஓட்டு கேட்க வேண்டும். கடந்த காலங்களில் அதிமுக தளபதிகள் இப்பகுதியில் திமுகவை ஒழித்துக் கட்டினார் அதிகளவு அதிமுக வாக்குகளை பெற்ற இந்த சூரியநல்லூர் பகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் முன்பு அதிமுகவில் இருந்த தளபதிகள் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதால் அதைவிட 1500 வாக்குகள் கூடுதலாக பெற்று வேட்பாளர் சத்தியபாமாவை வெற்றி பெற செய்ய வேண்டும் அதைத் தொடர்ந்து சூரியநல்லூர் பஞ்சாயத்தில் மீதமுள்ள இரண்டு கட்சிகள் டெபாசிட் இருந்தது என்ற வரலாறு அமைய வேண்டும் என முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.