கோயம்புத்தூர்:
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ், 2025-ஆம் ஆண்டில் உயிரிழந்தோர் உறுப்பு தான திட்டத்தில் (Deceased Donor Programme) சிறப்பாகச் செயல்பட்டு, பெறப்பட்ட கல்லீரலைச் சிறந்த முறையில் பயன்படுத்தியதற்காகக் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு ‘சிறந்த செயல்பாட்டு விருது’ (Best Performance Award in Liver Utilisation) வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.


சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘உறுப்பு தான தினம் 2026’ விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது. தானமாகப் பெறப்படும் உறுப்புகளைத் துரிதமாகவும் திறம்படவும் பயன்படுத்தி, உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறந்து விளங்கியதற்காக இக்கௌரவம் பிஎஸ்ஜி மருத்துவமனைக்குக் கிடைத்துள்ளது.


தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) மற்றும் மருத்துவம் – குடும்ப நலத்துறை சார்பில் இவ்விருது வழங்கப்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு முழுமையான மற்றும் உயர்தர சிகிச்சையை வழங்கி வரும் பிஎஸ்ஜி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவைக்குக் கிடைத்த அங்கீகாரமாக இது அமைந்துள்ளது.


உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்கான சிறந்த மருத்துவச் சேவையில் பிஎஸ்ஜி மருத்துவமனை தொடர்ந்து காட்டி வரும் அர்ப்பணிப்பிற்கு இந்த சாதனை மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *