மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
பார்வையாளராக பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர் சேதுராஜன் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழுவின் முக்கியத்துவம், உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதம், அவர்களது பணிகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார். ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். வகுப்பு வாரி பிரதிநிதித்து வத்தின் அடிப்படை யில் உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து தலைவராக ஹீராபீவி துணைத் தலைவராக கார்த்திகா செல்வி தேர்வு செய்யப் பட்டனர். மேலும் கல்வியாளராக பரமேஸ்வரி, முன்னாள் மாணவர்கள்,சுய உதவி குழு உறுப்பினர்கள் மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப் பட்டனர். முன்னாள் பள்ளிமேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர் கள் பாராட்டப் பட்டனர்.
ஆசிரியை சித்ரா நன்றி கூறினார். நிகழ்வில் பெற்றோர்கள், முன்னாள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.