நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திரா தொழில்நுட்ப தனியார் கல்லூரியில் எதிர்கால தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கிற்கு மகேந்திரா கல்விக் குழுமங்களின் துணைத் தலைவர் அஜய் தலைமை தாங்கினார் ஐ சி டி அகாடமி முதன்மை செயல் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார்

இந்த நிகழ்வில் கரையான் டெக்னாலஜி வாழ்த்தின் இந்தியா மெசஞ்சர் டெக் மகேந்திரா ஃபுல் லிட்டர் பல்வேறு நிறுவனங்களில் இருந்து செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர் எதிர்கால தொழில்நுட்பம் என்ற தலைப்பில் செமி கண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வருங்காலத்தில் பெரும் அளவில் ஆதிக்கம் செலுத்த உள்ளது என்றும் இந்தத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது

என்றும் இதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து வல்லுநர்கள் எடுத்துக் கூறினார் இந்த கருத்தரங்கு குறித்து ஐ சி டி அகாடமி முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கிராமப்புற மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த கல்லூரியில் ஆறுக்கும் மேற்பட்ட புரிந்துணர் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன

இதன் அடிப்படையில் டேக் மகேந்திரா கிரையான் டெக்னாலஜி போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூற உள்ளது வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம் மாணவ மாணவிகள் இந்த துறைக்கு தேவைப்படுகிறார்கள் எனவே நிறுவனங்களின் பார்வை தமிழ்நாட்டின் மீது படிந்துள்ளது இந்த வாய்ப்புகளை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் இந்த நிகழ்வில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மேலாளர்கள் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டு வருங்கால தொழில்நுட்பம் குறித்து எடுத்துக் கூறினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *