கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேல்குமாரமங்கலம் பாலம் அருகே மதுவிலக்கு தொடர்பாக பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் தீபா மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த 2 நபர்களை சோதனை செய்தபோது புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சாராய பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குணசேகர் விழமங்கலம்,.விக்னேஷ் திருத்துறையூர் ஆகிய இருவர்களிடமிருந்து 8 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.