செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் இயக்குநர்
உதவி இயக்குநர் அறிவுரையின்படி 15 வார்டு பகுதிகளிலும் அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.


வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக வடிகால்கள் நல்லமுறை தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக கண்கானிக்கப்பட்டு கொசு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.திடக்கழிவு மேலாண்மை திட்டம் விதி 2026-ன்படி நான்கு வகையாக குப்பைகளை தரம் பிரித்தல் மற்றும் அதிலிருந்து பெறப்படும் மக்கிய
உரம் (compost) இயற்கை உரம், மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வாரம் ஒருமுறை விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாய் பசுமை நண்பர்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது


பசுமையாக்குதல் உள்ளிட்ட பொது இடங்களை அழகுபடுத்துதல் மற்றும் மூலிகை நர்சரி வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது நாய்களுக்கான கருத்தடை (ABC) மற்றும் வெறிநாய்க்கடி
தடுப்பூசி (ARV) செலுத்தப்பட்டு வருகிறது கழிப்பறைகள்,பொது கழிவறைகள்,
சமுதாய கழிவறைகள் நல்லமுறையில் பராம றிக்கப்பட்டு வருகிறது எல்.இ.டி தெருவிளக்குகள் அனைத்தும் ஒளிர்கிறது. அவ்வப்போது பழுதாகும் தெரு விளக்குகளை உடனுக்குடன் மாற்றப்பட்டு வருகிறது. என செயல் அலுவலர் ந.லதா செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *