தேனி மாவட்டம் தேனி போடிநாயக்கனூர் கம்பம் சின்னமனூர் கூடலூர் போன்ற நகர்ப்புறங்களிலும் இது போலே அனைத்து கிராமப்புறங்களிலும் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கனரா வங்கி இந்தியன் வங்கி உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வங்கிகளும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்கம் போல் இயங்கின பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி கூட்டமைப்பு சார்பில் வங்கி ஊழியர்கள் நாளை முதல் 3 நாள் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய நாட்களில் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் இன்று ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும் என்று அறிவித்திருந்தன
அதன்படி இன்று காலை முதலே மாலை வரை வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி தேவைகளை பூர்த்தி செய்ய ஆர்வத்துடன் வங்கிகளுக்கு வந்து பண பரிவர்த்தனை மற்றும் வங்கி தொடர்பான பணிகளை மிக ஆர்வமுடன் முடித்துக் கொண்டனர். இது குறித்து கம்பம் கிளை மேலாளர் எஸ் பி எம் பால விக்னேஸ்வரன் பிரசாத் கூறும்போது பொதுவாக வங்கி வேலை நாட்களில் மதியம் 2 மணி வரை சுமார் 80 டோக்கன்கள் தான் போகும் ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொடர்ந்து நாளை முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் ஸ்டிரைக் நடைபெற உள்ளதாலும் வாடிக்கையாளர்கள் அதிகமாக காலை 1 மணிக்கே சுமார் 140 டோக்கன்கள் எடுத்து தங்களின் வங்கி தேவையை பொதுமக்கள் பூர்த்தி செய்து கொண்டனர்.
மேலும் இன்று நான்கு மணி வரை தொடர்ந்து வங்கி சேவை அளிக்கப்படும் என்றார் கம்பம் எஸ்பிஐ கிளை வங்கியில் அசிஸ்டன்ட் மேனேஜர் ஆர் சாந்தினி டிப்டி மேனேஜர் பிரசன்னா குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்றாலும் வங்கிகளுக்கு வந்த பொது மக்களுக்கு சிறப்பான சேவைகளை கனிவுடன் செய்தனர்