செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அருகே தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலுவை ஆதரித்து தேர்தல் நடத்தை விதிமுறை மீறி 45 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மேடை அமைத்து பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார்.
விஜய் பிரச்சாரத்தின் போது அன்று காலை ஜெம் நிறுவனர் வீரமணியின் வழக்கு குறித்து நீதி அரசர்கள் இந்த வழக்கு சம்பந்தமாக இது அரசியல் ஆக்க வேண்டாம். வழக்கு குறித்து செய்திகள் பதிவிட வேண்டாம்.
இது குறித்து யாரும் விவாதிக்க வேண்டாம் என தெரிவித்தனர். அதனை மீறி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இந்த வழக்கு சம்பந்தமாக பொது பொதுக்கூட்டத்தில் பேசி உள்ளார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களையும் இந்த வழக்கோடு இணைத்து பேசி உள்ளார்.
ஆகவே தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் நடத்தை விதிமுறைகளைமீறி 45 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான செலவு செய்த கணக்குகளை வேட்பாளரின் கணக்குகளில் சேர்க்க வேண்டும் அதை கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் காஞ்சி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன், மதுராந்தகம் நகர வழக்கறிஞர்கள் பிரவீன்குமார், முத்துக்குமார் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அணியை சார்ந்தவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனர்.