என்.எஸ்.எஸ் சார்பில் டெங்கு விழிப்புணர்வு-கண் பரிசோதனை முகாம்


முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில் கண்
பரிசோதனை மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித்திட்ட 2-ம் நாள் சிறப்பு முகாம் மு. தூரி கிராமத்தில் நடைபெற்றது

இதில் பரமக்குடி வாசன் கண் மருத்துவமனையும் நாட்டுநலப்பணித்திட்டமும் இணைந்து கண்பரி
சோதனை முகாம் தலைமை ஆசிரியர் சந்தான வேலு தலைமைலும், மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் முன்னிலையிலும் நடைபெற்றது.

அனைவரை யும் திட்ட அலுவலர் தர்மராஜ் வரவேற்றார்.முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து
கொண்டு கண்பரி சோதனை செய்து கொண்டனர்.பின்பு கீழத்தூவல் வட்டாரஅரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் நேதாஜி டெங்கு கொசு உருவாவதையும் அதை தடுக்கும் முறைகள் பற்றி செயல் விளக்கம் மூலம் விளக்கி பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அனைத்து கிராமத் தினருக்கும் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக் கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *