“செய்தி, ஜீவா செந்தில் “
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 பணிகள் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கெடுப்பு படிவங்களில் உள்ள விவரங்களை முழுமையாக நிரப்புவதற்காக கடலூர் மாவட்டத்தில் கீழ்க்காணும் இடங்களில் வாக்காளர்களுக்கு உதவும் பொருட்டு, உதவி மையங்கள், (நவம்பர்23ந்தேதி) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை நடத்தப்படவுள்ளது.
151-திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் நகராட்சி அலுவலகம், திட்டக்குடி, வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகங்கள், பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகம், அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள், திட்டக்குடி மேற்கு, கிழக்கு மற்றும் சிறுப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது.
152- விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் விருத்தாசலம், வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம், மணலூர், விளாங்காட்டூர், இருப்பு, நல்லூர், பெரியகாப்பான்குளம், முதனை, கருவேப்பிலங்குறிச்சி, ஆலிச்சிக்குடி, முகுந்தநல்லார், எடையார், கொடுக்கூர், மு.பரூர், கொல்லிருப்பு, எடச்சித்தூர், பள்ளிப்பட்டு, சின்னப்பரூர், விஜயமாநகரம், எருமனுார், வயலூர், அம்மேரி, செம்பளாக்குறிச்சி, மாத்தூர், பழையப்பட்டினம் மற்றும் ஆலடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள், மங்கலம்பேட்டை பேருராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது.
153-நெய்வேலி மற்றும் 154-பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மைய அமைவிடங்களிலும் நடத்தப்பட உள்ளது.
155- கடலூர் சட்டமன்ற தொகுதியில் கோண்டூர் சமுதாய நலக்கூடம், கிளிஞ்சிக்குப்பம், புதுக்கடை கிராம நிர்வாக அலுவலகங்கள், பெரியகாட்டுபாளையம், கீழ்குமாரமங்கலம், வெள்ளப்பாக்கம், சுத்துக்குளம் கடலூர் முதுநகர், நத்தப்பட்டு, பெரிய கங்கணாங்குப்பம், திருப்பணாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், வரக்கால்பட்டு உயர்நிலைப்பள்ளி, குமாரமங்களம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி, பாதிரிக்குப்பம் குளோரி உதவி பெறும் துவக்கப்பள்ளி, பாதிரிக்குப்பம், மந்தைவெளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குண்டு உப்பலவாடி, நாணமேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூக்கணாம்பாக்கம், மஞ்சக்குப்பம்-பெண்ணையார்ரோடு அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி அலுவலகம், கே.என்.சி பெண்கள் கலைக் கல்லூரி, மஞ்சக்குப்பம் ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வேணுகோபாலபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, தேவணாம்பட்டினம், புதுப்பாளையம், ஏபிஎஸ் சுசிலாதேவி, புருகீஸ்பேட்டை, சிங்காரத்தோப்பு நகராட்சி நடுநிலைப்பள்ளிகள்,
கடலூர் பழைய பஞ்சாயத்து கழக கட்டிட வளாகம், ஸ்ரீபாடலீஸ்வரர் தொடக்கப்பள்ளி, கம்மியம்பேட்டை செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவானந்தபுரம் மாவட்ட விற்பனை குழு மையம், கடலூர் முதுநகர் வெலிங்டன் தெரு செயின்ட் டேவிட் மேல் நிலைப்பள்ளி, கடலூர் முதுநகர்-குட்டக்காரத்தெரு நகராட்சி ஆரம்பப் பள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது.
156,குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் நடுவீரப்பட்டு, ஆபத்தாரணபுரம், வடலூர்- சேராக்குப்பம், தீர்த்தனகிரி ஊராட்சி ஒன்றிய ஆண்கள் துவக்கப்பள்ளிகள், திருவந்திபுரம், வெள்ளக்கரை காட்டுப்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளிகள், சாத்தான்குப்பம் அன்னை வேளாங்கண்னி குளுனி உயர்நிலைப் பள்ளி, சுப்பரமணியபுரம்-ஸ்ரீ ராமலிங்க அடிகளார் உயர்நிலைப் பள்ளி, குடிகாடு சமுதாய கூடம், பச்சையாங்குப்பம் அரசினர் உயர்நிலைப்பள்ளி, ஆலப்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம், பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், குள்ளஞ்சாவடி, கருங்குழியில் அரசினர் மேல் நிலைப்பள்ளிகள், வேலவினாயகர்குப்பம் அருள்மிகு வள்ளலார் உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது.
157-புவனகிரி சட்டமன்ற தொகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகங்கள், கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம், காவனூர், கம்மாபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது.
158-சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் புதுச்சத்திரம் குலுப்பை ராமசாமி செட்டியார் துவக்கப்பள்ளி, பு. முட்லூர், பரங்கிப்பேட்டை கிராமநிர்வாக அலுவலகங்கள், விபிஷ்ணபுரம் தி பள்ளி (ஸ்ரீநிவாச திருமண மண்டபம் அருகில்), சி-
தண்டேஸ்வரநல்லூர்,தாயம்மாள் நகர் பஞ்சாயத்து அலுவலகம், சிதம்பரம்- பரமேஸ்வரநல்லூர் பிரில்லியன்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி, வல்லத்துறை அரசு மேல் நிலைப்பள்ளி, பள்ளிப்படை டீ.இ.எல்.சி பள்ளி, கிள்ளை டவுன் பஞ்சாயத்து அலுவலகம், சி-கொத்தங்குடி- முத்தையா நகர் ரவுண்டானா வி.பி.ஆர்.சி. கட்டிடம் மகளிர் திட்ட அலுவலகம், சிதம்பரம்- சம்மந்தக்காரதெரு நகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, காசுகடை தெரு ராமசாமிசெட்டியார் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்- போல்நாராயணன்தெரு மற்றும் வடக்கு ரத வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் ஆகிய இடங்களில் நடத்தப்பட உள்ளது.
159-காட்டுமன்னார்கோயில்(தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆயங்குடி முஸ்லீம் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலகம், காட்டுமன்னார்கோயில் மற்றும் லால்பேட்டை பேரூராட்சி அலுவலகங்கள், வெட்சியூர்- வெண்ணையூர் அரசு தொடக்க பள்ளி, ஸ்ரீமுஷ்னம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கானூர் கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த உதவி மையங்களில், வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதில் எழும் சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்கும், சரியான முறையில் பூர்த்தி செய்வதற்கும் வழிவகை செய்யப்படும். இதற்காக, பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் களப்பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, வாக்காளர்கள் உரிய ஒத்துழைப்பு நல்கிடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சித்தலைவருமான,சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.