ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றியம் பகுதியில் தீவிர திருத்தப் பணிகள் குறித்து ஓன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் விழிப்புணா்வு ஆட்டோ பிரச்சாரம்


தூத்துக்குடி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட விழிப்புடன் செயல்படுமாறு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளதையடுத்து வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை நிரப்பும் முறை குறித்து பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. 2002ம் ஆண்டு வாக்காளர் விவரங்களைத் தேடுவது அவர்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது.

இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போதிய கால அவகாசம் இல்லை. அவர்கள் தங்கள் வழக்கமான பணியை முடித்துவிட்டு, கணக்கீட்டு படிவங்களை வழங்கி திரும்பப் பெறும் பணிகளை செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் தங்கள் விவரங்களை கவனத்துடன் நிரப்பி, வரும் டிச.4ம் தேதிக்குள் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடமோ வழங்கலாம். அவ்வாறு திரும்ப வழங்கும் போது, நிரப்பிய இரண்டு படிவங்களில் ஒன்றை தங்களிடம் அத்தாட்சியாக வைத்துக் கொண்டு, மற்றொன்றை தேர்தல் அலுவலரிடம் வழங்க வேண்டும். பின்னர் டிச.9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் போது தங்கள் வாக்கு சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். வாக்கு சேர்க்கப்படாவிட்டால் மீண்டும் சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வாக்குரிமை பறிபோகாத வகையில் பாதுகாக்க விழிப்புடன் செயல்பட வேண்டும். என்பதை வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஓன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான இளையராஜா 15 ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் டிச 4ம் தேதி வரை ஆட்டோ பிரச்சாரத்தை தொடங்கி வைத்தாா். சூழற்சி முறையில் 15 ஊராட்சி பகுதிகளில் ஆட்டோ பிரச்சாரம் நடைபெறும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *