அரியலூரில் ஏஐடியூசி ஒன்பதாவது மாநாடு அரியலூர் ஜி ஆர் திருமண மன்றத்தில் சிறப்பாக நடந்தது தோழர் பாலகிருஷ்ணன் நினைவறங்கத்தில் மாவட்ட துணை தலைவர் ஆர் தனசிங் தலைமை தாங்கினார் து பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்

சி சந்திரகுமார் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார் மாநில செயலாளர் ஆர் தில்லைவனம் நிறைவுறையாற்றினார் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் தண்டபாணி வேலை அறிக்கையை முன் வைத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் இரா உலகநாதன் விவசாய சங்க பொருளாளர் ஜி ஆறுமுகம் அரியலூர் ஒன்றிய செயலாளர் து பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

அரியலூர் நகரத்தில் சாலையோர தெரு வியாபாரிகளை கடை போட விடாமல் அப்புறப்படுத்தி வாழ்வாதாரத்தை பறிக்கும் போக்கினை கைவிட்டு கடைகள் போட அனுமதிக்க வேண்டும் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் சிமெண்ட் விற்பனை பல மாதங்களாக குறைந்து நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் மோசமான போக்கினால் ஆலை தனியாருக்கு போய்விடுமோ என்று தொழிலாளர்கள் அச்சப்படும் நிலையில் சிமெண்ட் விற்பனையை அதிகரித்து பொது துறையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாநாட்டில் நல்லுசாமி பெரம்பலூர் எம் ஆர் எப் பிரபாகரன் சிலம்புச் செல்வி ஜீவா காத்தவராயன் உஷா உட்பட அரியலூர் ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் ஊராட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் கட்டிட தொழிலாளர்கள் உடல் உழைப்பு தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *