கோவையில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு இயக்கம் கோவை மண்டலக் கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சீமா அரங்கில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார்

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,,திராவிட நட்புக் கழகத் தலைவர் சிங்கராயர் ஆகியோர் அமைப்பின் நோக்கம் குறித்து உரையாற்றினார்கள்.காசு. நாகராசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

டாக்டர் டென்னிஸ், பேராசிரியர் காமராஜ், முகமது ரஃபீக்,ஓசை காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை திருப்பூர் ஈரோடு கரூர் மாவட்டங்களைச் சார்ந்த வழக்கறிஞர்கள்,சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகள், மதசார்பின்மை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும்,
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *