ஜெயங்கொண்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்
அரியலூர் மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம் இரண்டாவது ஆண்டு பேரவை கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு இளையராஜா அம்பேத்கர் வெங்கடேசன் சரவணன் ராஜ்குமார் நீலமேகம் பார்த்திபன் ராமநாதன் விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில செயலாளர் சிவாஜி ஆட்டோ தொழிலாளர்கள் சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக பேரவை கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார் பொருளாளர் ராமசாமி முன்னிலை வகித்தார் சிஐடியு மாவட்ட செயலாளர் அரியலூர் தோழர் துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்

தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மாவட்ட தலைவராக ராமசாமி பொருளாளராக வெங்கடேசன் செயலாளராக சத்தியமூர்த்தி துணை தலைவர்களாக சிவாஜி மற்றும் ராஜ்குமார் துணை செயலாளர் அம்பேத்கர் மற்றும் செந்தில் குமார் நிர்வாக குழு உறுப்பினர்களாக 14 பேர் கொண்ட குழுவினரும் தேர்வு செய்யப்பட்டனர்

கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஆட்டோவை இயக்கக் கூடாது அனைவரும் காக்கி உடை அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் பணம் நகை ஆகியவற்றை பொதுமக்கள் ஆட்டோவில் தவறவிட்டால் அதனை அவரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் டீசல் பெட்ரோல் கேஸ் விலை அதிகரிப்புக்கு கண்டனம் தெரிவிப்பது மேலும் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை உயர் நீதிமன்ற உத்தரவு படி உயர்த்த வலியுறுத்தப்பட்டது ஆன்லைன் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் அமைப்பு சாரா நல வாரியத்தை வலுப்படுத்த வேண்டும் மானிய விலையில் பெட்ரோல் டீசல் கேஸ் போன்ற எரிவாயு பொருட்களை அரசு உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முடிவில் நாலு ரோடு ஆட்டோ சங்கத் தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *