இந்திய தேர்தல் அதிகாரி கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி காலை 10 மணி அளவில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள் சாமி தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இந்திய தலைமை தேர்தல் அதிகாரியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலை யான்டி. டேனியல் ராஜ் உள் படம் 150கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்த அரை மணி நேரம் கழித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய தலைமை தேர்தல் அதிகாரியை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரே இடத்தில் முதலில் காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள் சாமி தலைமையிலும் அதன் பிறகு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜ் தலைமையில் ஒரே இடத்தில் ஒரே கோரிக்கைக்காக காங்கிரஸ் கட்சியினர் இரண்டு அணியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது அங்கு இருந்த பொதுமக்கள் மத்தியில் வியப்பாக பார்க்கப்பட்டது

ஒரே பிரச்சனைக்காக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் காரணமாக இரண்டு அணியாக ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பு ஆக பேசப்பட்டு வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *