வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி.
ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இற்று 22.11.2025 நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அருணாச்சலப் பிரதேசம் அணிகள் மோதின.இதில் தமிழ்நாடு பெண்கள் அணி 7 -0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதில் நயனா-3 தர்ஷினி-1, துர்கா-1, சோபிக்காசெல்லம்மாள்-1, சஹானா -1 ஆகியோர் கோல்கள் அடித்தனர். தமிழ்நாடு அணி ஆந்திரா, ராஜஸ்தான், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய அணிகளில் வெற்றிபெற்று 9 புள்ளிகளுடன் A பிரிவில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
25.11.2025 நடைபெறஉள்ள அரையிறுதி போட்டியில் C பிரிவில் முதலிடம் பெற உள்ள அணியுடன் மோத உள்ளது.B பிரிவில் மணிப்பூர், கர்நாடகா, குஜராத், சட்டிஸ்கர், ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளனர்.
தேசிய ஜூனியர் மகளிர் கால்பந்து போட்டிக்கு கலந்துகொள்ள சென்ற தமிழக அணிக்கு திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பாக திண்டுக்கல் ஜான்பால் CBSE பள்ளியில் 5.11.2025 முதல் 15.11.2025 வரை சிறப்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.