மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரி அருகே பயணிகள் வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் பொதுமக்கள், வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களின் நிலை மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்