தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாமில் லயன்ஸ் கிளப் திருச்சிராப்பள்ளி விஷன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, கதிர் ஒளி அறக்கட்டளை சார்பில்போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி
நிகழ்ச்சி திருச்சி அந்தநல்லூர் சீரா தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முதுகலை ஆசிரியர் பாலசுப்ரமணி வரவேற்றார்.


லயன்ஸ் சங்க வட்டார தலைவரும், கதிர் ஒளி அறக்கட்டளை நிறுவனருமான பொறியாளர் சரவணன்,லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன தலைவர் ஹேமலதா,லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன செயலரும், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோக ஆசிரியர் விஜயகுமார்,பஞ்சநாதன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ருக்குமணி, இயற்கை மருத்துவர் கௌதம் உட்பட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்
போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்று,
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.

போதைப் மீட்டெடுத்து, அவர்களை பழக்கத்திற்குள்ளானவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என் உறுதிமொழி ஏற்றனர்.நிறைவாக தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மேலாண்மை ஆசிரியர் திலகேஸ்வரன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *