தேனி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் தமிழக முதல்வர் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் வழங்கி சிறப்பித்தார்

அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவித்தல் தாய் மற்றும் சேய் நலம் பெறுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் கடந்த ஜூன் 22. 2026. பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமை இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது

இதன்படி தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மருத்துவ வட்டாரத்தில் 429 குழந்தைகளுக்கும் தேனி மருத்துவ வட்டாரத்தில் 376 குழந்தைகளுக்கும் ஆண்டிபட்டி மருத்துவ வட்டாரத்தில் 340 குழந்தைகளுக்கும் போடிநாயக்கனூர் மருத்துவ வட்டாரத்தில் 326 குழந்தைகளுக்கும் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை மருத்துவ வட்டாரத்தில் 185 குழந்தைகளுக்கும் சின்னமனூர் மருத்துவ வட்டாரத்தில் 268 குழந்தைகளுக்கும் உத்தமபாளையம் மருத்துவ வட்டாரத்தில் 282 குழந்தைகளுக்கும் என்று மொத்தம் 2543 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது

மேலும் இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நாளில் தாய்மாமன் தங்க மோதிரம் 1 கிராம் வழங்கி வழி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் பெரியகுளம் தவலேந்து மாவட்ட சுகாதார அலுவலர் மரு வரதராஜன் இணை இயக்குனர் மருத்துவப் பணிகள் அன்புச் செழியன் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் குமார் உட்பட மருத்துவர்கள் செவிலியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *