C K RAJAN
Cuddalore District Reporter..
9488471235..
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி தாலுக்கா ஆதிநாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்குளம் பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த டிபிசி தற்பொழுது இயங்கவில்லை. அப் பகுதி வாழ் மக்கள் சார்பில் பெருமாள் ஏரி நீர் பாசன சங்க செயலாளர் தானுர் சண்முகம் தலைமையில் விவசாயிகளோடு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்களிடம் நேரில் சந்தித்து மனு கொடுத்த பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது டிபிசி தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை எனவும், ஒரு நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் விதம் கூலி
டிபிசி தொழிலாளிக்கு அரசு வழங்கப்படுகிறது.
இந்தப் பணம் பத்தாது என்பதால் டிபிசி தொழிலாளிகள் வேலைக்கு வருவதில்லை, விவசாயிகள் நாங்கள் கூடுதலாக கூலி கொடுத்து டிபிசி தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்து உள்ளோம். நாங்கள் கூடுதலாக கொடுக்கக் கூடிய பணத்தை அரசு வரையறு செய்ய வேண்டும். அரசுக்கு நிதி சுமை இருப்பதால் விவசாயிகளிடமே அதிகப்படியான கூலியை பிடித்து தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு விவசாயிகள் தயாராக உள்ளனர்.
இதை சட்டபூர்வமாக செயல்படுத்தினால் மாண்புமிகு முதல்வர் எண்ணப்படி லஞ்சம் இல்லாமல் நடக்கும் என்று விவசாயிகள் கருதுகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் குருவையில் பாதிக்குமேல் சம்பா பயிர்களுக்கு தண்ணீர் போதாது நிலைஇருப்பதால் மேட்டூரிலிருந்து நீர்வரத்து இல்லாமல் ஒரு லட்சம் விவசாய நிலம் தஞ்சாவூரில் கருகிவிட்டது. இதுபோன்ற விவசாயிகளின் பல்வேறு பிரச்சனை குறித்து அரசு உணவுத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்களிடம் விவசாயிகளின் நிலைமையை எடுத்துச் சொல்லி உள்ளேன் விரைவில் விவசாயிக்கான நல்ல திட்டங்கள் தமிழக முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்ப்போடு இருக்கிறோம் என தெரிவித்தார்