ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்துக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் தொடர்ந்து குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மதன் ராஜா இவர் சிறு குரு தொழில் துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதி பொதுமக்கள் தருவைகுளம் ரோடு டேவிஸ் புரம் மெயின் ரோட்டில் திடீரென்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இதனால் தூத்துக்குடி ராமேஸ்வரம் ரோடு போக்குவரத்தால் முடங்கியது இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு வந்தனர். அப்போது பொதுமக்களிடம் பிரச்சனை தொடர்பாக காவல்துறையினர் பேசினார்கள் அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு 20 நாட்களுக்குப் பிறகு இன்று தான் தண்ணீர் வந்தது அதுவும் ஆறு குடம் தண்ணீர் தான் வருகிறது நாங்கள் தொடர்ந்து குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். மாப்பிள்னளயூரனி பஞ்சாயத்து அலுவலகத்தில் போய் கேட்டால் நாங்கள் என்ன செய்ய என்று பதிலளிக்கிறார்கள் நாங்கள் யாரிடம் போய் சொல்வது வாரத்துக்கு 500 ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலைமையில் நாங்கள் உள்ளோம் ஆகையால் எங்களுக்கு வேறு வழி இல்லை அதனால் சாலை மறியலில் ஈடுபடுகிறோம் எங்களுக்கு நிரந்தரமாக குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *