கனிம வளங்கள் கொண்டு செல்லும் கனராக லாரிகளுக்கு பர்மிட் ரத்தாகும் இணை இயக்குனர் தெரிவிப்பு-அனுமதி இல்லாமல் கனிம வளங்களை கொண்டு செல்லப்படும் தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இணை இயக்குனர்

செப்டம்பர் 30ஆம் தேதியே கனிமங்கள் ஏற்றும் கனரக லாரிகளுக்கு GPS பொருத்துவதற்கு கடைசி தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசும் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து கிண்டி கனிமவளத்துறையின் இயக்குனர் அலுவலகத்தில் அரசு அங்கீகரீக்கபட்ட நிர்பயா நிறுவனத்தின் GPS கருவி கனரக லாரியில் பொருத்தப்படு அதனை இணை இயக்குநர் ஆறுமுக நைனார் உடனிருந்து லாரியை கொடி அசைத்து பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார்

இந்த ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு இருக்கும் கனரக லாரிகள் எந்த குவாரிகளில் இருக்கிறது எவ்வளவு பொருட்களை ஏற்றுகிறார்கள் மேலும் எவ்வழியாக செல்கிறது ஓட்டுநர் மது அருந்தி இருக்கிறாரா அல்லது வாகனத்தில் ஏதேனும் பழுதுகள் இருக்கிறதா என்பது குறித்து எல்லாம் இந்த ஜிபிஎஸ் கருவி துல்லியமாக காட்டும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது இந்த ஜிபிஎஸ் கருவில் இரண்டு சிம்கார்டுகள் பொருத்தப்பட்டு இருக்கிறது இந்த ஜிபிஎஸ் கருவி மூலம் அரசு மற்றும் வாகனத்தின் உரிமையாளர் இருவரும் கனரக லாரி எங்கு செல்கிறது என்பது குறித்து எல்லாம் தனித்தனியாக கண்காணிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இணை இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த ஆறுமுக நயினார் கூறுகையில் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பெயரில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் கனரக லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என்பது வரும் 30ஆம் தேதிக்குள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர் மேலும் அவர் கூறுகையில் 30 ஆம் தேதிக்கு மேல் ஜிபிஎஸ் பொருத்தப்படாத கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் கனரக லாரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் அனுமதிச்சீட்டும் வழங்கப்படாது என்றும் தெரிவித்தார் அதற்கு உண்டான பர்மிட் இணையதளத்திலேயே ரத்தாகிவிடும் என்று தெரிவித்தார்.

அனுமதி இல்லாமல் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படும் கன லாரிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்

அதேபோல் ஜிபிஎஸ் கருவியில் இருந்து தொடர்ந்து பத்து நிமிடத்திற்கு மேல் அதன் இருப்பிடம் காட்டவில்லை என்றால் உடனடியாக dஆக்டிவேட் ஆகி விடும் என்றும் அதன் பின்பு அந்த வாகனத்தை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகி யுவராஜ் கூறுகையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கனரக லாரிகள் இயங்குவதாகவும் கனிம வளங்கள் அதில் கொண்டு செல்லப்படுவதாகவும் அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மட்டுமே ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் மேலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படாத வாகனங்கள் ஏதேனும் முறைகேடுகள் நடக்கிறதா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியதும் குறிப்பிடத்தக்கது அதனை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார் ஜிபிஎஸ் கருவி பொருத்துவதன் மூலம் கனிம வளங்கள் கொள்ளை அடிக்க முடியாது என்றும் அதேபோல் அளவுக்கு மீறி வாகனத்தில் சுமைகளை ஏற்ற முடியாது என்றும் அது ஜிபிஎஸ் மூலம் காண்பித்துக் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *