இலங்கைக்கு கடத்த முயன்ற மருந்து மாத்திரை பறிமுதல்


தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் இருந்து தொடர்ந்து இலங்கைக்கு சட்ட விரோத பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வீரபாண்டிய பட்டினம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கீழ்ப்பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் காவலர்கள் அடங்கிய குழு வீரபாண்டியபட்டினம் கடற்கரை பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு ஊசி மருந்து. சிரப்பு மருந்து. மாத்திரை உள்ளிட்டவைகள் 15 மூடைகளில் இலங்கைக்கு கடத்துவதற்கு படகுமூலம் தயாராக இருந்தது க்யூ பிரிவு போலீசாரை பார்த்தவுடன் கடத்த முயன்ற கும்பல் ஓடிவிட்டது இதனை எடுத்து பறிமுதல் செய்த மருந்து மாத்திரைகளை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர் இலங்கைக்கு கடத்த முயன்ற பொருட்களின் மதிப்பு ஒன்னேகால் கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *