திருச்சி, உறையூர் சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் , யோகம் பிசியோதெரபி சென்டர், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, கதிர் ஒளி அறக்கட்டளை சார்பில் இயன்முறை மருத்துவ சிகிச்சை முகாம் சீராத்தோப்பு பாரதியார் குருகுலம் வளாகத்தில் நடைபெற்றது .

சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அகிலாண்டேஸ்வரி வரவேற்றார்.


முதுகலை கணித ஆசிரியர் ஸ்ரீதர், உடற்கல்வி ஆசிரியர் கல்பனா, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.லயன்ஸ் சங்க வட்டார தலைவரும் கதிர் ஒளி அறக்கட்டளை நிறுவனருமான சரவணன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன தலைவர் ஹேமலதா, சங்க சாசன செயலரும், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார், ஸ்ரீ சக்ரா இயற்கை மருத்துவம் யோகா மற்றும் அக்குபஞ்சர் மருத்துவமனை முதன்மை மருத்துவர் கௌதம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

யோகம் பிசியோதெரபி சென்டர் இயன்முறை மருத்துவர் பாலாஜி கழுத்து மற்றும் முதுகுவலி , இடுப்பு மற்றும் முழங்கால் வலி ,தோள்பட்டை இறுக்கம் , மூட்டுவலி தொடர்பான இயக்கக் குறைபாடுகள், விளையாட்டுக் காயங்கள், விபத்துக்குப் பிந்தைய உடல் இயக்கப் பயிற்சி என அனைத்திற்கும் ஆலோசனை மற்றும் சிகிச்சையளித்தார்.அல்ட்ரா சவுண்ட் போன்ற மருத்துவ உபகரணங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டன.நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் மாணிக்கம் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *