மாதவரம் அடுத்த பால்பண்ணை மாத்தூர் சென்னை மாநகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட,அப்போலோ ஆம்ஸ்ட்ராங் நகரில் துப்புரவு பெண் தொழிலாளி பிரியா என்பவர் குப்பைகளை தரம் பிரித்து கொண்டிருந்தபோது சிறிய பேப்பர் பண்டலில் பணம் ரூபாய் 12 ஆயிரத்து 500 ஐ கண்டெடுத்தார்.

உடனே அதனை உரியவரிடம் ஒப்படைக்க அந்த தெருவில் உள்ள வசிக்கும் குடியிருப்பு வாசிகளிடம் தொலைந்து போன பணம் யாருடையது என விசாரணை செய்து வந்தார்.

இதனை அறிந்த விஜயலட்சுமி என்ற பெண் ஓடோடி வந்து அந்த துப்புரவு தொழிலாளி பெண்ணை கட்டிப்பிடித்து இது என்னுடைய பணம்தான் இதற்கு ஆதாரம் இதுதான் என தன்னுடைய வீட்டை காண்பித்து ஆனந்த கண்ணீர் மல்க பணத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியில் திகைத்தார். பின்னர் அப்பகுதிவாசிகள் துப்புரவு தொழிலாளி பிரியாவின் நேர்மையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *