தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கெங்குவார்பட்டி தேவதானப்பட்டி வடுகபட்டி தென்கரை தாமரைக் குளம் ஆகிய 6 பேரூராட்சிகளின் பேரூராட்சிகளின் அங்கமான பணியாளர்களான மாபெரும் தூய்மை பணியாளர்கள் நல முகாம் தாமரைக் குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 12 ஆவது வார்டு அண்ணாமலை நகரில் உள்ள பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்றது
இந்த முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர்கள் தாமரைக்குளம் செ. முருகன் வடுகபட்டி கல்பனா தேவி ஆகியோர் தலைமை வகித்தனர் தென்கரை பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேஷ் அய்யனார் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த முகாமில் தூய்மை பணியாளர்களின் ஆதார் அட்டை குடும்ப அட்டை வங்கி கணக்கு புத்தகம் கைப்பேசி எண் போட்டோ ஆகியவைகள் பெறப்பட்டு பரிசீலனை செய்து அரசு நல திட்டப் பதிவு நமஸ்தே அடையாள அட்டை ஆயுஷ்மான் பாரத் அட்டை போன்றவைகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் தூய்மை பணியாளர்களின் உடல்நிலை சீராக உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கு மருத்துவ முகாமாக இசிசி எக்ஸ்ரே போன்றவைகள் எடுக்கப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் தகுந்த மருத்துவ ஆலோசனைகளும் இலவசமாக மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. முகாமில் பங்கேற்ற அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பி.பி.ஏ. பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் 6 பேரூராட்சிகளின் தூய்மை பணியாளர்கள் பங்கேற்று பயன் அடைந்தார்கள் இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தலைமை இளநிலை உதவியாளர் வடுகபட்டி ஒம் முருகன் இளநிலை உதவியாளர்கள் தென்கரை முத்துகிருஷ்ணன் தாமரைக் குளம் ஜியாகான் தேவதானப்பட்டி ஆண்டிபட்டி கெங்குவார்பட்டி ஆகியோர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.