கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் காந்திகிராமத்தில் அமைந்துள்ள புனித தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் அருட்சகோ.சகாயராணி தலைமையில் தொடங்கியது.சிறப்பு விருந்தினராக கரூர் மாநகராட்சி 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் மஞ்சுளா பெரியசாமி, கருத்தாளராக சத்யா (உதவி பேராசிரியர், கணினி அறிவியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தரகம்பட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
உடன் ஆலய உழவாரப்பணி, போதை ஒழிப்பு பேரணி,காசநோய் ஒழிப்பு பேரணி, ஆரம்ப சுகாதார நிலையம் பார்வை, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட பல பணிகளை இலக்காகக் கொண்டு முகாம் தொடங்கப்பட்டது.தொடர்ச்சியாக கரூர் பசுபதிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்வையிட்ட நாட்டுநலபணி திட்ட மாணவிகள் தொடர்ந்து பசுபதிபாளையம் அங்கான்வாடியில் குழந்தைகளுடன் இணைந்து அங்கன்வாடி தினம் கொண்டாடப்பட்டது.போதை ஒழிப்பு பேரணியும் நடைபெற்றது.பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
முகாமினை திட்ட அலுவலர் கரோலின் மற்றும் உதவி உதவி திட்ட அலுவலர் ஜான்சி ராணி ஆகியோர் வழிநடத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.