திண்டுக்கல் மாவட்டம் நத்தம் NPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடைபெறும் 40-வது தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் – 2026 போட்டிகள் நடைபெற உள்ளது.

இப்போட்டிகள் வரும் அக்டோபர் 2 முதல் 4-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளம் தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் நிர்வாகிகள், போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மேடையில் சாம்பியன்ஷிப் போட்டிக்கான வெற்றிக் கோப்பையும் காட்சிப்படுத்தப்பட்டது.

இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களுக்கு மாநில அளவில் போட்டியிடும் வாய்ப்பை ஏற்படுத்தவும் இந்த ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *