தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்9715328420
தாராபுரம், செப். 30:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முன்னேற்பாடாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, குண்டடம் நால்ரோடு பகுதியில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் குண்டடத்தில் இருந்து இடையன்கிணறு, சூரியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படவில்லை.
இதனால் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுகுறித்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் குண்டடம் நால்ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.