சின்னமனூர் நகராட்சியில் எஸ்.ஜ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அமைச்சர் ஆய்வு தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் special intensive Revision SIR பணிகளை நடைபெற்று வருவதை அமைச்சர் தங்கம் தென்னரசுநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் .ராமகிருஷ்ணன் நகராட்சி ஆணையாளர் ரா.து . கோபிநாத் நகராட்சி நகர் மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார் தெற்கு மாவட்ட திமுக பிரமுகர் இரா. முத்துக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்