திருவாரூர் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை என்.சி.சி. கப்பற்படை பிரிவு மாணவர்கள் தன் தாய் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல் ஏக் பெட் மா கே நாம் செயலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் வட பாதிமங்கலம் சோமசுந்தரம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலை
பள்ளியின் தாளாளர் முனைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின்போது அரசு உதவி பெறும் ஆண்கள் வடபாதி மங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தியாகராஜன் அவர்கள் என்சிசி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்வில் என்.சி.சி. முதன்மை அதிகாரி ஆர்.சதீஷ்குமார் உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.முருகேசன் உள்பட இருபால் ஆசிரிய ஆசிரியர்கள் பள்ளியின் அலுவலர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.