நாகப்பட்டினம்,ஜூலை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி பெருஞ்சாத்தங்குடி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்த குடிநீர் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருமருகல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெருஞ்சாத்தங்குடி கிராமத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கையில் பதாகைகள் மற்றும் குடத்துடன் வந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினை முழுவதுமாக தீர்த்து வைக்கப்படும் என உறுதி அளித்தார்.