கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கேர்- டி அறக்கட்டளை பயிற்சி மையத்தில் வளரிளம் பெண்களுக்கான தையல் பயிற்சியில் சுமார் 25 பெண்கள் சுமார் 8 மாத காலம் பயின்று பயிற்சியை நிறைவு செய்த நிலையில் அனைவருக்கும் அதற்க்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கள ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் கேர்- டி யின் சமுக பணியாளர் கார்த்திகா,தையல் ஆசிரியர் ஞானத்தாய் ஆகியோர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *