ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின் உத்தரவின்படி, ஆற்காடு வேப்பூர் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உதவி ஆய்வாளர் ரேவதி தலைமையிலான காவல்துறையினர், பள்ளி இடையில் நின்ற ஒரு குழந்தையை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரின் தொடர் முயற்சியால் இதுவரை மொத்தம் 33 பள்ளி இடைநின்ற குழந்தைகள் மீட்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.