நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி திருமலைராஜன் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக திட்டச்சேரி காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருமருகல் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஆற்றில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டவர் இடையாத்தங்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் ஜெயராமன் (வயது 45) என்பதும் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவரை யாரேனும் தண்ணீரில் தள்ளி விட்டு கொலை செய்தார்களா? அல்லது தானாக தவறி விழுந்தாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *