பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி மனைவியும் எம்எல்ஏவும் ஆன சௌமியா அன்புமணி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகதூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். பின்பு செய்தியாளர்களிடம் சௌமியா அன்புமணி கூறுகையில் இன்று தூத்துக்குடி நாளை திருநெல்வேலி நாளை மறுநாள் நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்கு வந்துள்ளேன் நாளை தாமிரபரணி ஆற்றில் ஆய்வு செய்வதற்காக வந்துள்ளேன் தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கிறது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டுள்ளது ஏற்கனவே அன்புமணி தாமிரபரணி காப்போம் என நடைப்பயணம் மேற்கொண்ட போது விழிப்புணர்வு நடைபெற்று இருந்தது.

தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பது உள்ள பிரச்சினைகள் பற்றி ஏற்கனவே நான் சட்டமன்றத்தில் பேசி உள்ளேன் நான் நாளை ஆய்வு செய்கிறேன் எப்படி கழிவு கழிக்கிறது அதனை எப்படி சரி செய்யலாம் என்று ஆய்வு செய்ய உள்ளேன்

இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஆற்றில் தான் கழிவுகள் கலக்கப்படுகிறது தாமிரபரணி ஆறும் அதற்கு விதிவிலக்கு அல்ல. நேற்று சென்னையில் மது இல்லா தமிழகம் விழிப்புணர்வு நேற்று நடைபெற்றது தமிழ்நாட்டில் மது ஒழிப்பு மதுவிலக்கு கொள்கை கொண்டுவர வேண்டும் என்று மக்களுக்கான விழிப்புணர்வு நடைபெற்றது.

54 லட்சம் பேர் மது மூலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அவர்களை எப்படி மீட்பது. இரண்டு தலைமுறையின மது பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர் மூன்றாவது தலைமுறை நேராவது ஒழுக்கமாக வளர வேண்டும் மது இல்லாததமிழகமாக இருக்க வேண்டும். இரண்டு தொகுதி இடைத்தேர்தல் நன்றாக போய்க்கொண்டு உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தாராபுரத்தில் நேற்று பிரச்சாரத்தில் பேசும்போது யாரையுமே நாம் உடல் நிலமை பற்றி பேசக்கூடாது நல்ல நிலைமை நல்ல பேச்சு நேற்று இருந்தது ஆனால் கடைசியில் இந்த பெண் உடல் பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது உடல் கேலி செய்யக்கூடாது. மீள விட்டான் பகுதியில் புதியதாக ஒரு மதுக்கடை திறப்பதாக வந்ததை அடுத்து அங்குள்ள மக்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக கடை ஆரம்பிக்கவில்லை கடை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்

அங்கு மது கடை திறக்க கூடாது அதனை சுற்றி பள்ளிக்கூடங்கள் வழிபாட்டுத்தளங்கள் பொதுமக்கள் அதிகம் நடக்கக்கூடிய பகுதி மதுக்கடை அங்கு திறந்தால் ஆயிரக்கணக்கான மது பிரியர்கள் அங்கு கூடி விடுவதால் பொதுமக்கள் அந்த சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் போராட்டம் நடத்தும் பொது மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்றும் துணை நிற்கும்.

எந்த ஒரு விடுதியாக இருந்தாலும் இறைச்சி வழங்குவதாக இருந்தால் அது பிரச்சனை தான் இறைச்சி கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் ஒரு கிலோ இறைச்சி கெட்டுப்போன கறி நல்ல கறியோடு சேர்க்கப்பட்டால் அதனால் பாதிக்கப்பட்டு வாந்தி பேதி ஏற்படும் ஆனால் காய்கறிகள் தான் நல்லது. தமிழக வெற்றிக்கழக ஆட்சி 100 நாள் தான் ஆகியுள்ளது

மதுக்கடைகள் மூடியது சிங்கப்பெண் படைத்திட்டம் பெண்கள் பாதுகாப்புக்காக இந்த திட்டம் வரவேற்கிறேன் 10 ஆயிரம் காவல் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது நிறைய காவல் துறை அதிகாரிகள் தேவைப்படுகிறது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க காவல்துறையினர் அதிகமாக காலியிடங்கள் உள்ளது நிரப்பப்படுவதை வரவேற்கிறேன் .

தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் பிரச்சனைகளை முன்னெடுத்து தமிழக வெற்றிக்கழக அரசு செய்து வருகிறது அதற்காகவே பாராட்டுகிறேன் நல்ல ஆலோசனைகளை நாங்கள் தமிழக அரசுக்கு வழங்குகிறோம். இன்னும் வேகமாக நல்லது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். தமிழக வெற்றிக் கழகம் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்வதற்கான 75% உள்ளூர் இளைஞர்களுக்கு உள்ளூரில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்கள் அந்த தேர்தல் வாக்குறுதியை சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று சௌமியா அன்புமணி எம் எல் ஏ கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *