கல்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் முகையூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் திருமாலிருஞ்சோலை அருள்மிகு ஸ்ரீகள்ளழகர் பெருமாள் ஆலயத்தில் நேற்று முன்தினம் கருட சேவை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
இதில் கள்ளழகர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார் மேள தாளங்களுடன் திருவீதி உலா நடைபெற்றது வட திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் பெருமாள் பக்தர்கள் மற்றும் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் கிராம வீதிகளில் பக்தர்கள் பொதுமக்கள் பட்டாசு வெடித்து சிறப்பாக வரவேற்பு அளித்து சாமி தரிசனம் செய்தனர்