அரியலூரில் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ம காஷ்னிகா இவரது வயது 13 இவர் பாரதி ஆத்திச்சூடியில் 110 சிறுகதைகள் மூலம் விளக்கம் அளித்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்

தமிழ் பண்பாட்டு பேரமைப்பு அமைப்பு செயலாளர் ஆசிரியர் அரியலூர் நல்லப்பன் மாணவி அவரது பெற்றோர் ஆசிரியை சங்கீதா மணிகண்டன் மான்போர்ட் பள்ளியின் தமிழாசிரியை எழுத்தாளர் செவ்வந்தி ஆகியோர் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மா ரேணுகோபால் அவர்களை சந்தித்து பாரதியார் ஆத்திச்சூடி புத்தகம் மாணவி மாநில அளவில் பெற்ற சான்றிதழ் அனைத்தையும் வழங்கினார்

அனைத்தையும் பார்வையிட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவி மா காஷ்னிகாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து கூறினார் அப்போது உதவி கல்வி அலுவலர் பழனிச்சாமி ஒருங்கிணைந்த பள்ளி உதவி கல்வி திட்ட அலுவலர் கண்காணிப்பாளர் சரவணன் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *