தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் தாய் மாமன் தங்கம் திட்டத்தின் கீழ் 50 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கம்பம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் பானுமதி தலைமை வகித்தார் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 50குழந்தை களுக்கும் தங்க மோதிரங்களை அணிவித்து மனதார வாழ்த்தினார்
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கழக துணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், செயற்குழு உறுப்பினர் அய்யர், கம்பம் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் ஏராளமான தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர்.