தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், அக்- 8. தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் சேவையை போற்றும் விதமாக சேவை தீப பேரணி நடைபெற்றது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி தலைமை பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ.க சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தஞ்சையில் இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், வடக்கு மாவட்ட அமைப்பாளர் பூண்டி வெங்கடேசன் ஆகியோரின் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் உமாபதி முன்னிலையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால சாதனை, மக்கள் சேவையை போற்றும் விதமாக தீபம் ஏந்தி கட்சிக் கொடிகளுடன் பா.ஜ.க.வினர் பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணி பழைய பஸ் நிலையம் முன்பு முடிவடைந்தது.


இதில் மாநில என்.ஜி.ஒ பிரிவு செயலாளர் வக்கீல் ராஜேஸ்வரன், மாவட்ட பொருளாளர் விநாயகம், மாவட்டத் துணைத் தலைவர் அம்ரீத்அரசன், ஓ.பி.சி. அணி மாநில பொது செயலாளர் கதிரவன், ஓ.பி.சி அணி மாவட்ட பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம், ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் இளங்கோவன், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் விவேகானந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *