முத்துப்பேட்டை., அக்.08.-

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குப்பைகளை முறையாக அகற்றாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், குப்பைகளை வளமாக்கும் வளம் மீட்பு பூங்கா திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி கிடப்பதாகவும், அவற்றை முறையாக அகற்றுவதில் நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மேலும், குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்து பயனுள்ள வளங்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டிய வளம் மீட்பு பூங்கா திட்டம் தாமதமாகி வருவதால், குப்பைகள் தேங்கும் நிலை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும், நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பினர்.

எனவே, பேரூராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன், இனிவரும் காலங்களில் தினசரி குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், வளம் மீட்பு பூங்கா திட்டத்தை இனியும் தாமதப்படுத்தாமல் விரைந்து செயல்படுத்தி, குப்பை மேலாண்மையை முறையாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *