காயல் பட்டிணம் : அக் 08
சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு ஏதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என த வெ க அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திருவள்ளூர் மாவட்டம் , திருவொற்றியூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தின் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர் மேலும். கைது செய்ய பட்ட நபரை சட்ட ரீதியாக கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க பட வேண்டும் மேலும். இந்த பாலியல் இக்கொடூரச் சம்பவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையான கண்டிக்கிறது.
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பணி புரிய குரைவான சம்பளத்திற்கு தனியார் நிறுவனம் அழைத்து வரும் வட மாநில தொழிலாளர்கள் மீது அம் மாநிலங்களில் வழக்கு பதிவு செய்ய பட்டிருக்கிறதா மற்றும் காவல் துறையினரால் தேட படும் குற்றவாளிகளாக இருக்கலாம்? கூலி தொழிலாளி என்கிற பெயரில் பதுங்கி இருக்கிறார்களா ? எதேனும் குற்றங்களை நிகழ்த்தி விட்டு தப்பி செல்ல கூடிய வாய்பு இருக்கு ? ஆகவே வட மாநில தொழிலாளர்களை காவல் துறையினர் முறையாக ஆவணங்களை ஆய்வு செய்வதுடன் பல கோனத்திலும் விசாரணை செய்ய வேண்டும்.
மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பாலியல், கொலை கொள்ளை போன்ற குற்ற செயலில் வட மாநில தொழிலாளர்கள் ஈடு பட்டு வருவதனால் ஒவ்வொருவரின் அடையாளம், பணியிடம், அவரை அழைத்து வந்தவர், தங்குமிடம், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிவில் இருக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது .
எனவே : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே,இனிவரும் காலங்களில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் எங்கும் நடை பெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை உடனடியாக எடுப்பதுடன் சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை த வெ க அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.