தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்.

தாராபுரம் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட தாராபுரம் கோட்டம், வடக்கு/குண்டடம் பிரிவு அலுவலகத்தின் கீழ் உள்ள 003-குண்டடம் மற்றும் 004-ருத்ராவதி ஆகிய மின்பகிர்மானப் பகுதிகளில் நிர்வாகக் காரணங்களால் 2026 அக்டோபர் மாதத்திற்கான மின் நுகர்வு கணக்கீட்டுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட மின்பகிர்மானப் பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர், கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் செலுத்திய மின்கட்டணத் தொகையையே 2026 அக்டோபர் மாதத்திற்கான மின்கட்டணமாக செலுத்துமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மின்நுகர்வோர் உரிய கவனம் செலுத்தி, அறிவுறுத்தப்பட்டுள்ளபடி மின்கட்டணத்தை செலுத்துமாறு தாராபுரம் மின்பகிர்மான வட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *