தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 2026-2027.ஆம் ஆண்டு நுண் கலைப் போட்டிகள் SAC FIESTA 26 கடந்த நான்கு நாட்கள் கல்லூரி நிறுவன செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர்.வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் எம் கோபாலகிருஷ்ணன் எஸ். பொன் ராம் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் கம்பம் கம்பம் sanjus world அழகுக் கலை நிபுணர் சஞ்சனா நடுவராக பங்கேற்று நெருப்பு இல்லாமல் சமையல் செய்யும் போட்டி சிகை அலங்காரம் கைகளில் வர்ணம் தீட்டுதல் முகத்தில் வர்ணம் தீட்டுதல் கோலப் போட்டி தட்டு அலங்காரம் தனிப்பாடல் குழுப் பாடல் பாடுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கம்பம் சத்குரு சங்கீத நாட்டிய கலாலயத்தைச் சேர்ந்த எஸ் காவ்யா ஆனந்த் ஜெயராம் மற்றும் ஹிப் ஹாப் நடன வழிகாட்டியும் மேற்கத் திய நடன ஆசிரியருமான கே பார்த்திபன் நடுவர்களாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .
பரதநாட்டியம் தனி நடனம் குழு நடனம் இருவர் நடனம் இசைக்கு ஏற்ற நடனம் ஆடை அலங்காரம் மற்றும் திரைப்பட காட்சிகள் நடித்துக் காட்டல் போன்ற போட்டிகள் நடைபெற்றன இதேபோல் பெண்களுக்கு ஏற்ற கோலப் போட்டி ஓவியப்போட்டி கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி தேவையற்ற பொருட்களைக் கொண்டு பொருள்கள் செய்தல் காய்கறிகளில் கலை வடிவத்தை உருவாக்குதல் போன்ற பல் வேறு மாணவிகளுக்கு பயனுள்ள போட்டிகள் நடைபெற்றன ஒவ்வொரு போட்டிகளிலும் மாணவிகள் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.
ஒவ்வொரு போட்டிகளிலும் கல்லூரி அனைத்து துறை மாணவிகளும் பங்கேற்று தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்கள் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர். கல்லூரியில் நுண் கலைப் போட்டிகள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய கலைக்குழு மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் பேராசிரியைகளுக்கும் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.