தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகர பகுதியில் மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் 2023 மற்றும் 24 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது
2021 ஆம் ஆண்டுக்கு முன்பு மழை வெள்ளநீர் செல்லும் மூன்று வழித்தடம் தான் இருந்தது. தற்போது 14 வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் அதிகாரிகளுடன் சென்று மேட்டுப்பட்டி வழித்தடம் வழியாக கடல் பகுதிக்கு வரும் முகத்துவாரத்தை பார்வையிட்டார்
அப்போது மண் அடைப்பு இருப்பதை பார்த்த மேயர் ஜெகன் உடனடியாக அதிகாரிகளிடம் உடனடியாக மணல்களை அப்புறப்படுத்த வேண்டும் மழை காலம் துவங்குவதற்கு முன்பு உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அதன் பிறகு பகுதியில் மாநகர் பகுதியில் இருந்து வரும் வழித்தடம் கடலில் கலக்கும் முகத்துவாரத்தை பார்வையிட்டு அப்போது அந்தப் பகுதியில் வடிகால் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வந்தது அதனையும் மாநகராட்சி மேயர் ஜெகன் பார்வையிட்டார்.
அதன் பிறகு மேயர் ஜெகன் கூறுகையில் 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் மழை நீர் செல்வதற்கு மூன்று வழித்தடம் மட்டுமே இருந்தது தற்போது ஆக்கிரமிப்பு எல்லாம் அகற்றப்பட்டு 14 வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது தொடர்ந்து அதிகாரிகளுடன் சேர்ந்து மழை நீர் செல்லக்கூடிய வழித்தடங்களை கண்காணித்து வருகிறேன்
அதன்படி இன்று திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதிகளில் கடலில் மழை நீர் சேரும் முகத்துவாரத்தை பார்வையிட்டு அதில் உள்ள மணல் திட்டுகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பணிகள் உடனடியாக துவக்கப்படும் என்று மேயர் ஜெகன் கூறினார். உடன் மாநகராட்சி அதிகாரிகள் திமுகவினர் உடன் இருந்தனர்.