கல்பாக்கம் அக் 8
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று 8 ஆம் தேதி காலை 11 மணியளவில் கல்வி விழிப்புணர்வு பொம்மலாட்டம் நிகழ்ச்சி பள்ளி தாளாளர் அருட்சகோதரி சுஜி பள்ளி முதல்வர் ஜான்சி ராணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
கூவத்தூர் பொம்மலாட்டக் கலைஞர் அகநம்பி தி பால சுப்பிரமணியம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பழங்கால கம்பி பொம்மைகள் பயன்படுத்தி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிகழ்த்தினார் இதில் ஆசிரியர்கள் மற்றும் எல்கேஜி முதல் 4 ஆம் வகுப்பு வரையான 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்