துகுளத்தூர் செய்தியாளர்
ஆர்.செந்தில்குமார்

கமுதி அக் :-09

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் இயங்கி வரும் சேதுசீமை இயற்கை விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண்மை அனுபவ பயிற்சிக்காக வருகைதந்தனர்


சேதுசீமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும்,மத்திய, மாநில அரசின் திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் சேவைகள் குறித்தும் மாணவிகளுக்கு தெளிவாக நிறுவனத்தின் தலைவர் முத்துராமலிங்கம் அவர்கள் தெளிவாக விளக்கினார்


மேலும் கமுதி வட்டாரத்தில் பயிரிடப்படும் பாரம்பரிய நெல் வகைகள்,சிறு தானியங்கள், பயறு வகைகள் பயிரிடும் முறை பற்றியும் , மகசூல் பற்றியும் ஸ்ரீ பகவதி அறக்கட்டளையின் தலைவரும் விவசாயி மு.வெள்ளைப் பாண்டியன் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்,
சேதுசீமை நிறுவன வணிகத் தொடர்புகள் குறித்து முதன்மை செயல் அலுவலர் நித்யா செயல் விளக்கமளித்தார் ஊரக வேளாண் பணி திட்டத்தின் களப்பணியில் மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *