மதுரை, மாவட்டத்தின் அனைத்து நான்கு வழிச் சாலைகளிலும் அதிவேக வாகனங்களை கட்டுப் படுத்த ஸ்பீடுரேடார்கன்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதனை எஸ். பி. தேவநாதன் துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் புறநகரில் விபத்துகளை தடுக்கவும் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சி யாக, மதுரை மாவட்டத்தில் அதிக வேகத்தில் சென்று விபத்துக் களை ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் – விதிக்கும் வகையில், அதிநவீன “ஸ்பீடு ரேடார் கன்” தொழில் நுட்பம் மதுரை மாவட்டத்தில் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இதன் துவக்கமாக, மதுரை ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பில் இந்த பணியை எஸ்.பி. தேவ நாதன் துவக்கி வைத்து, அதன் செயல்பாடுளை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, , மாவட்டத்தில், அதிக வேகத்தில் சென்று விபத்துக் களை ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்
பட்டுள்ளது. அதன்படி, அனைத்து முக்கிய நான்கு வழிச்சாலைகளிலும் இக்கருவிகள் பயன்படுத்தப் பட்டு “ஓவர் ஸ்பீட்” வழக்குகள் தீவிரமாக பதிவு செய்யப்பட உள்ளன.
சாலையோரம் ஸ்டேண்ட் மூலம் வைக்கப்படும் இக்கருவியில், அந்தந்த பகுதிகளுக்கான குறிப்பிட்ட வேகவரம்பு முன்கூட்டியே பதிவு செய்யப் பட்டிருக்கும். அதன்படி, குறிப்பிட்ட வேகத்தைவிட அதிவேகமாகவரும்வாகனங்களை இந்த கருவி ஸ்கேன் செய்யும். இதனை தொடர்ந்து, வாகனத்தின் நம்பர் பிளேட்டுடன் கூடிய கலர் போட்டோ,வாகனம் கடந்த வேகம் மற்றும் நேரம் ஆகியவற்றுடன் கூடிய பிரிண்ட் அவுட்டை உடனடி யாக வழங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இ-செலான் மற்றும் நேரடி விசாரணை மூலம் வழக்கு கள் பதிவு செய்யப்படும்.
மதுரை மாவட்டத்தின் அனைத்து நான்கு வழிச்சாலைகளிலும் வேகத்தை கட்டுப்படுத்தி சாலை விபத்து களை தடுக்கும் வகையில் விரிவுபடுத்தப்
பட உள்ளது என அவர் கூறினார்.