சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், பண்ணவாடி ஆதீனம் ஸ்ரீ பரமேஸ்வரர் திருமடத்தில், குலகுரு குழந்தையானந்த சுவாமிகளுக்கான குருபீடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில், தமிழ்நாடு கோவம்ச முன்னேற்ற நலச்சங்கத்தின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு பண்டாரத்தார் சமுதாய கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான கலையரசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், தமிழ்நாடு கோவம்ச முன்னேற்ற நலச்சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர்கள் குமாரசாமி, மோகன், மாநில மகளிர் அணி சார்பில் கலைச்செல்வி கலையரசன், மாநில கேட்டரிங் அணிச் செயலாளரும், தமிழ்நாடு பண்டாரத்தார் சமுதாய கூட்டமைப்பின் துணைச் செயலாளருமான கார்த்திராம், தமிழ்நாடு பண்டாரத்தார் சமுதாய கூட்டமைப்பின் மாநிலத் துணைத்தலைவர் சோலார் ஸ்ரீதர், கேட்டரிங் அணியின் மேற்கு மாவட்டத் தலைவர் பெருந்துறை முத்து மற்றும் உறவினர் சென்னிமலை கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
குலகுரு குழந்தையானந்த சுவாமிகளுக்கான குருபீடம் அமைப்பதற்கான இவ்வடிக்கல் நாட்டுவிழா, ஆன்மிகப் பாரம்பரியத்தையும் குரு மரபின் சிறப்பையும் போற்றும் நிகழ்வாக அமைந்தது.
இவ்விழாவில் பங்கேற்ற சங்க மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள், சமுதாயப் பிரதிநிதிகள் தங்களது வருகையால் விழாவிற்குச் சிறப்பு சேர்த்தனர்.