துறையூர் அக்-09
திருச்சி மாவட்டம் துறையூரில் திருச்சி ரோட்டில் பெண்களுக்கான பிரத்தியேகமான “ஒயிட் ஹவுஸ் ” டாப்ஸ் & சாரீஸ் என்ற புதிய ஷோரூமை திருச்சி முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள்
மற்றும் வாடிக்கையாளர்களை உரிமையாளர்கள் அன்சார் அலி, அப்துல் சலீம் ஆகியோர் வரவேற்றனர்.இவ்விழாவில் முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின்குமார்,துறையூர் திமுக நகர செயலாளர் முரளி, ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன், அண்ணாதுரை, சிவ சரவணன் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார்,மணிபாலா மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.திறப்பு விழா சலுகையாக அன்று ஒரு நாள் மட்டும் டாப்ஸ் ரூபாய் 49 விற்பனை செய்யப்பட்டது. இதனால் பெண்கள் கூட்டம் அலைமோதியது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்